தேவையானவை: சேமியா - கால் கிலோ, ரவை - 150 கிராம், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 50 கிராம், நெய் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 4, இஞ்சி - ஒரு துண்டு, தயிர் - ஒரு கப்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வாணலியில் நெய் ஊற்றி, சூடானதும் கடுகு, உளுந்தம்பரும்பு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் மிளகு, சீரகம், ஒன்றிரண்டாக உடைத்த முந்திரிப்பருப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் சேமியா, ரவை சேர்த்து, சிவக்க வறுக்கவும்.
இதை ஒரு பாத்திரத்தில் கொட்டி, உப்பு, தயிர் மற்றும்
தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்திற்குக் கரைத்து, இரண்டு மணி நேரம் ஊற வைத்து, இட்லியாக வார்த்து வேகவைத்து எடுக்கவும். இட்லி மிதமான சூட்டில் இருக்கும் போதே, தேங்காய்ச்சட்னி தொட்டுச் சாப்பிட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக