பங்கு சந்தைப்
தொடர்பான படிப்புகள்
ஒரு நாட்டின் 2வளர்ச்சிக்கு மிகவும் பிரதான பங்கு வகிப்பது, நிதித் துறை. நாட்டின் வளத்தை நிதித்துறைதான் நிர்ணயிக்கும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நிதித்துறையில் பிற
துறைகளைக் காட்டிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
நிதித்துறை சார்ந்த உயர்படிப்புகளைப் பல்வேறு
நிதித்துறை நிறுவனங்கள்
வழங்குகின்றன.வேலை வாய்ப்பு மிகுந்த அப்படிப்புகளையும், வழங்கும் நிறுவனங்களையும் பற்றிய சிறு கண்ணோட்டம்.
National Stock Exchange (NSE)
NSE நிறுவனம், Wealth Management, Financial Sector Management, Global Financial Markets, Financial Market போன்ற நிதித்துறை தொடர்பான முதுகலைப் படிப்புகளை வழங்கிவருகிறது. Financial Market படிப்பில் டிப்ளமா படிப்பும் வழங்கிவருகிறது. மேலும் ஐந்து வருட ஒருங்கிணைந்த MBA Capital Markets படிப்பும் வழங்கப்படுகிறது.
இந்த' ஒருங்கிணைந்த படிப்பில் +2 தேர்ச்சி
பெற்றவர்கள் சேரலாம். பிற முதுகலைப் படிப்புகளில் சேர, பினான்ஸ் துறை சார்ந்த இளநிலைப் பட்டப் படிப்புகளில் குறைந்தபட்சம்
50% மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். CAT, MAT, XAT போன்ற தேர்வுகளை
எழுதியுள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
NSE FinBasics என்ற ஆன்லைன் படிப்பையும் இந்நிறுவனம் அளித்து வருகிறது.இந்தப் பயிற்சி பினான்ஸ் துறையை சார்ந்து
உள்ளவர்கள்தான் படிக்க வேண்டும் என்பதில்லை.அந்தத் துறையைச் சேராதவர்கள், கல்லூரி
மாணவர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் படிக்கலாம். இந்தப் படிப்பில் நிதித்துறை சார்ந்த அடிப்படை பயிற்றுவிக்கப்படும். வருமானம், வரிவிகிதம், சேமிப்பு, செலவு, முதலீடு, வரவு செலவு திட்டமிடுதல் போன்றவற்றை இப்
படிப்பின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.
நாம் அன்றாட வாழ்வில் எவ்வாறு செலவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை இந்தப் பயிற்சி
மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ளமுடியும்.முதுகலை பட்டப் படிப்புக்கான கட்டணம் ரூ.3 முதல் 4 லட்சம் வரை செலவாகும். இப்படிப்பை முடித்தவர்கள் வங்கிகள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், தரகு மையங்கள், மூலதன சந்தை நிறுவனங்கள் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புகள் பெற முடியும்.
மேலும் விவரங்களுக்கு:
www.nseindia.com.
Bombay Stock Exchange (BSE)
இந்நிறுவனமும் பல்வேறு முதுநிலைப் படிப்புகளை வழங்கி வருகிறது. Banking and Finance, Business journalism, Global Financial markets ஆகிய படிப்புகள்
முக்கியமானவை. இவைதவிர, தொலைநிலைக் கல்வியில் ஸ்டாக் மார்க்கெட் துறையில் ஓராண்டு
அடிப்படை மற்றும் அட்வான்ஸ்டு படிப்பும் அளிக்கப்படுகிறது.
Business journalism பிரிவில் முதுநிலை டிப்ளமா படிப்பையும் அறிமுகம் செய்துள்ளனர். மாணவர்கள் மற்றும் தொழில் நிபுணர்களுக்கு கேப்பிடல் மார்க்கெட்டிங் மற்றும் கமோடிட்டி, வெல்த் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் கரன்சி மார்க்கெட் போன்ற சான்றிதழ் படிப்புகளும் உள்ளன. இதனுடன் மாஸ்டர் ஆப் பினான்ஸ், குளோபல் பினான்ஸ் மற்றும் பிசினஸ்
அட்மினிஸ்ட்ரேஷன் போன்ற படிப்புகளும் இங்கு
வழங்கப்படுகின்றன.
இந்தப் படிப்புகளை முடிப்பவர்கள் முதலீட்டு
வங்கிகள், கேப்பிடல் மார்க்கெட்ஸ் துறையில் பணிபுரியலாம். சுய தொழிலும் செய்யலாம். ரூ.45
ஆயிரம் முதல் 1.40 லட்சம் வரை இப்படிப்புகளுக்கு செலவாகும். மேலும் விவரங்களுக்கு;
www.bseindia.com.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக