சிகரம்
பனித்துளி சிப்பிக்குள் நீர்த்துளியானால்
அது முத்தாகலாம்!
சிதறிய கற்கள் சிற்பியின் சிந்தனையில்
ஒன்றானால் அது சிற்பமாகலாம்!
கலைஞரின் கையில் தூரிகை பட்டால்
அது ஓவியமாகலாம்!
ஏழையின் புன்னகை வானில் விரிந்தால்
அது வானவில்லாகலாம்!
தென்றல் தாலாட்டில் முகில்கள் சிரித்தால்
அது மழையாகலாம்!
இயற்கையின் பார்வை இதயத்தில் பட்டால்
அது கவிதையாகலாம்!
மணம் பரப்பும் மன்றங்கள் மலர்ந்தால்
அது காவியமாகலாம்!
தன்னம்பிக்கை எனும் விதையை நாளும் விதைத்தால்
அது கனியாகலாம் !
இறுதியில், இயற்கை நோக்கி இளைஞர்கள்
பயணித்தால் அது சிகரமாகலாம். !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக