வெஜிடபிள் கட்லெட்
வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:
நறுக்கிய உருளைக்கிழங்கு,
கேரட், முட்டைகோஸ், பீன்ஸ்- தலா 1 கப், பட்டாணி - 1 கப், இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் -1 டீஸ்பூன்,
கொத்தமல்லி இலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், கடலைமாவு - 4 டீஸ்பூன், பிரெட் தூள் - அரை கப், உப்பு தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை: நறுக்கிய காய்கறிகளை குக்கரில்
போட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் வைக்கவும். குக்கர் ஆவி அடங்கிய பிறகு குக்கரை திறந்து, அதிலிருக்கும் தண்ணீரைத் தனியாக வடிக்கவும். பின்பு காய்களை நன்கு மசிக்கவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு மசித்த கலவையைப் போட்டு சுருள சுருள கிளறி இறக்கி விடவும்.
கலவை நன்கு ஆறிய பிறகு உருண்டைகளாக பிடிக்கவும். காய் வேக வைத்த தண்ணீரில் கடலை மாவை கலந்துவைக்கவும். பிறகு கைகளில் எண்ணெய் தடவி உருண்டைகளை எடுத்து தட்டி கடலைமாவு கலவையில் கலந்து பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு வேகவிட்டு எடுத்து தக்காளி கெட்ச்அப்புடன் பரிமாறவும். காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகளுக்கு இது சூப்பர் ஸ்நாக்ஸாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக