நமக்கு ஏன் தாகம் ஏற்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?
உயிருள்ள பொருள்கள், தாவரங்கள், விலங்குகள் அனைத்தும் நீரினால் உருவானவை. நாம் விளையாடும் பொழுதும், சுவாசிக்கும்பொழுதும் நம் உடல் தண்ணீரை இழக்கிறது. இந்த இழப்பை நாம் ஈடுகட்டியாக வேண்டும்.நமது உடலில் தண்ணீர் குறைந்துவிட்டது என்பதை மூளை கண்டுபிடித்ததும் அது நம் வாய் மற்றும் தொண்டைக்கு அனுப்புவதினால்
அவை உலர்ந்து விடுகின்றன. அதனால் நமக்கு தாகம் ஏற்படுகிறது.
ஒரு வயது முதிர்ந்த மனிதனின் உடலில் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. அதில் 3 லிட்டர் தண்ணீராகும். நமக்கு தாகம் எடுத்து எந்த அளவுக்கு நாம் தண்ணீர் அருந்துகிறோமோ அதே அளவுக்கு நம் ரத்தத்தில் உள்ள நீரின் அளவும் குறையாமல் இருக்கும்.
ஒவ்வொரு நாளும் ஒரு மனிதன் சுமார் 2 லிட்டர்
தண்ணீர் குடிக்கிறான். நாம் உண்ணும் உணவின் மூலமாக ஒரு லிட்டர் தண்ணீர் நம் உடலுக்குக் கிடைக்கிறது.காய்கறிகள், முட்டை, மாமிசம் இவற்றிலும் தண்ணீர் உள்ளது.
நம் உடலிலுள்ள ஒவ்வொரு திசுக்களும் தண்ணீரை சார்ந்துதான் உள்ளது. தண்ணீர் ஒரு உயர்வான பொருளாகும். ஏனெனில் தண்ணீர் கிடைக்காவிட்டால் நாம்
உயிரையும் இழக்க நேரிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக