Our website provides health tips, general knowledge, education, science, cooking tips, history etc. Our website was created for people.

திங்கள், 30 மே, 2022

எனது தேசம் கவிதை | enathu desam kavithai in tamil


எம் முந்தையர்
ரத்தம் சிந்திய
வேள்வியில்
விளைந்தது
இந்திய தேசம்!

எந்த நாட்டிலும்
இல்லா
விந்தைகள் ஆயிரம்
இருந்திடும் தேசம்!

மலையும், காடும்,
ஓடும் நதியும்,
அலையும் கடலின்
ஒவ்வொரு துளியும்,
என் தேசத்தின்
பெருமை பேசும்!

இந்திய மலைக்கும்
முக்கடல் முனைக்கும்
சுதந்திர காற்று வீசும்!

முகங்களில்
மொழிகளில்
வேற்றுமை இருக்கலாம்...
மதங்களில் கூட
பலவகை இருக்கலாம்...
மனங்களில்
நாங்கள் இந்தியர்கள்!

அன்னை பூமியாம்
பாரத நாட்டின்
பிள்ளைகள் என்பதில்
எத்தனை எத்தனை
ஆனந்தம்!

எல்லைக்குள்
ஏதும் தொல்லைகள்
என்றால்,
ஒவ்வொரு வீட்டிலும்
ஆள் வரும்!

வாங்கிய
விடுதலையை
தாங்கிப் பிடிப்போம்!

வான் முட்டி
பறக்கட்டும்
சுதந்திர கொடியை
துாக்கிப் பிடிப்போம்!

இந்தியன் என்பதில்
பெருமிதம்
கொள்வோம்!

எப்போது
கேட்டாலும்
தப்பாது சொல்வோம்!

வாழ்க இந்திய
மணித்திரு நாடு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Page Links