*முடியாதது எதுவுமில்லை
எந்த உயரமும்
தொட்டு விடும் தூரம் தான்... ஊக்கத்தையும், உழைப்பையும்
உன் வசமாக்கிக் கொண்டால்!
*மகிழ்ச்சி என்பது
மற்றவர் தருவதல்ல...
அதற்கான மந்திர சாவி
உன் மனதிலேயே இருக்கிறது!
*உன் கால் தடுக்கிய கல் கூட உன்னை கவனமாய் போகச் சொல்லி தான் எச்சரித்திருக்கும்.
ஆக, கல்லை கடுகடுக்காதே!
*வியர்வைகளை விதைத்திடு வறுமைகள் நீங்க
அதுவே வாசல் திறக்கும்!
*துணிந்தவனை
துன்பங்கள் துரத்தாது நம்பிக்கை வை... இலக்குகளை எட்டுவது எளிதாகி விடும்!
*விடியலுக்கு ஆசைப்படுபவன் நீ இருளையும் ஏற்றுக் கொள்... மண்ணைத் தோண்டாமல் எந்த புதையலும் கிடைக்காது!
*சூரியச்சுடர் நீ
உனக்கு தூண்டுகோல் தேவையில்லை
பாறையிலும் விதை முளைக்கும்...
அதுபோல் முட்டி முட்டி முயன்று பார்
முடியாதது எதுவுமில்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக