Our website provides health tips, general knowledge, education, science, cooking tips, history etc. Our website was created for people.

வியாழன், 8 ஏப்ரல், 2021

Google பற்றிய 17 சுவாரசியமான தகவல்கள் !!



 



1.கூகுள் (google) உலகத்தில் அதிகம் பார்க்கப்பட்ட இணையதளம் ஆகும். பிங்கில் அதிகம் தேடப்பட்ட இணையதள பக்கம் ஆகும்.


2.கூகுள் (google) முதலில் லேரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் என்ற இரண்டு கல்லூரி‌ மாணவர்களால் தொடங்கப்பட்டது. இணைய தளங்களை தரவரிசைப் படுத்தும் ஒரு தளமாக இதை உருவாக்க விரும்பினர். ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தின் இணைப்பை எத்தனை இணைய தளங்கள் பகிர்கின்றன என்பதை அடிப்படையாக வைத்து இந்த தரவரிசை உருவாக்கப்பட்டது.


3.கூகுள் (google) என்ற சொல் கூகொல் என்ற சொல்லில் இருந்து வந்நது.இதன் பொருள் ஒன்றுக்கு பக்கத்தில் 100 பூஜ்ஜியம் போடுவதால் வரும் எண்ணைக் குறிப்பதாகும். எவ்வளவு தரவுகளை தாங்கள் தேட விரும்புகிறோம் என்பதைக் குறிக்கும் வகையில் இந்த பெயரை அவர்கள் பயன்படுத்தினர்.


4.கூகுளின் (google) தலைமை அலுவலகம் கூகுள்ப்ளெக்ஸ் என அழைக்கப்படும்.இது கலிஃபோர்னியாவில் உள்ள சிலிகான் வேலியில் உள்ளது.


5.கூகுளின் (google) தலைமை அலுவலகத்தில் டிரெக்ஸ் டைனொசரின் பெரிய சிலை ஒன்று இருக்கும் அது அடிக்கடி ஃப்ளமிங்கோ பறவையால் முழுவதுமாக மறைக்கப்படும். கூகுள் (google) எப்போதும் அழிந்துவிடக்கூடாது என்று‌ ஊழியர்களுக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது இது என்று ஒரு வதந்தி இருக்கிறது.


6.லெகோ எனப்படும் நெகிழி பொம்மை பாகங்களைக் கொண்டு செய்யப்பட்ட பெட்டியில்தான் கூகுளின் (google) முதல் சர்வர் இடம் பெற்றிருந்தது.


7.இந்த தலைமை‌ அலுவலகம் மிகவும் பசுமையாக இருக்கும்.அங்கே‌ புல்லை சீர் செய்வதற்கு தோட்டக்காரர்களுக்கு பதிலாக ஆடுகள் இருக்கும்.


8.தனது ஊழியர்களுக்கு விலையின்றி உணவு அளித்த முதல் பெரிய தொழில்நுட்ப நிறுவனம் கூகுள் (google) ஆகும். ஊழியர்கள் தங்கள் செல்லப்பிராணியான நாய்களைக் கொண்டுவரவும் இங்கே அனுமதி உண்டு.


9.கூகுள் (google) இமேஜ் தேடுதல் 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.அது 2000 ஆம் ஆண்டு ஜெனிஃபர் லோபஸ் ஜெர்மனி விருது விழாவில் அணிந்த பச்சை ஆடை அதிக தேடுதலில் இருந்தது.ஆனால் அதை பார்க்க வழியில்லாமல் இருந்தது.


10.கூகுள் (google) முதன் முதலில் தன்னுடைய இமெயில் (email) சேவையை ஜிமெயில் (Gmail) என ஏப்ரல் 2004ஆம் ஆண்டு 1ஆம் தேதி வெளியிட்டதால் மக்கள் இதை ஏமாற்றம் என கருதினர்.


11.2006ல் யூடியூப் கூகுளின்ப பகுதியானது அது 1.5 பில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டது. இப்போது யூடியுப் 2 பில்லியன் மாதாந்திர பயனார்களை பெற்றுள்ளது. மேலும் 1 நிமிடத்திற்கு 400 மணிநேர வீடியோக்கள் ஏற்றப்படுகின்றன.


12. 2009ல் கூகுளின் ஒரு ப்ரோக்கிராமர் தவறுதலாக "/" என்ற குறியீட்டை கூகுளின் (google) தடைசெய்யப்பட்ட இணையதளப் பதிவகத்தில் (பட்டியலில்) இணைத்தார். கிட்டத் தட்ட எல்லா இணைய தளத்தின் யு.ஆர்.எல். பெயரிலும் இந்த "/"குறியீடு இருக்கும் என்பதால் ஒரு தளத்தையும் கூகுள் வழியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.


13. ஒவ்வொரு நாளும் கூகுளில் (google) செய்யப்படும் 15% தேடல்கள் புதிதாக தேடப்படுபவையாகும். வேறு எதிலும் தேடப்படாதவையாகும்.


14. கூகுளுக்கு (google) உண்மையில் 6 பிறந்த நாள்கள். ஆனால் அது செப்டம்பர் 27ஐ யே தனது பிறந்த தினமாக கொண்டாடுவதற்கு தேர்ந்தெடுத்தது.


15. 2013 ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்து கூகுள் பயனாளர் கூகுள் (google) நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. ஹாட் மெயிலை கூகுளில் தேட முயன்றால் தரக் குறைவான தகவல்களைப் பார்க்க கூகுள் பரிந்துரைப்பதாகக் கூறியும் சிறுகுழந்தைகள் உள்ள தன் வீட்டில் இது கண்டிக்கத்தக்கது என்றும் கூறி கூகுள் மீது வழக்கு பதியப்பட்டது.


16. கூகுள் (google) ஒரு தேடலின் முடிவைத் தருவதற்கான கணிப்பு ஆற்றலின் (Computing power) அளவு, அப்பல்லோ 11 கலன் மூலம் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்புதுவதற்குத் தேவைப் பட்ட கணிப்பு ஆற்றலின் அளவுக்கு சமம்.


17. இப்போது கூகுள் (google) வெறும் தேடுபொறியாக கருதப்படுவதில்லை.எதிர்கால வளர்ச்சிக்கு உதாரணமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மற்றும் புதிய விளையாட்டு தளம், ஓட்டுநர் இல்லாத கார்கள் என அனைத்தையும் உள்ளடக்கியதே.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Page Links