கோடை வரும் முன்பே வெக்கை வந்துவிட்டது. தாகம் தாகம் என்று உள்ளுறுப்புகள் எல்லாம் அலறத் தொடங்கிவிட்டன. கோடை காலத்தில் போதுமான நீர்ச்சத்தைப் பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். என்னென்ன உணவுப் பொருட்களில் எவ்வளவு நீர் சத்து இருக்கிறது? என்பதைப் பற்றி காண்போம்.
*வெள்ளரிக்காய் தர்பூசணியை விட சிறந்தது. இதில்,96.7 சதவீத நீர்ச்சத்து உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் நமது வளர்சிதை மாற்றத்தைச் சிறப்பாக செயல்படச் செய்கின்றன.
*எலுமிச்சையில் 96.5 சதவீத நீர்ச்சத்து உள்ளது. மேலும் இதில் உள்ள சிட்ரிக் அமிலம் உள்ளுறுப்புகளில் உள்ள புண்களை ஆற்றுவதோடு, செரிமானத்தைத் தூண்டுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
*தர்பூசணியில் 91.5 சதவீத நீர்ச்சத்து உள்ளது. கோடைக்கு ஏற்ற பழம் என்றால் தர்பூசணி தான். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தையும் சிறப்பாக்குகிறது.
*தக்காளியில் 94.5 சதவீத நீர்ச்சத்து உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் ரத்தத்தைப் பெருக்குகின்றன.
*கேரட்டில் 90.4 சதவீத நீர்ச்சத்து உள்ளது. கேரட்டில் உள்ள கரோட்டினாய்டுகள் கண்களுக்கு மிகவும் நல்லவை.
*காலிஃபிளவரில் 92.1 சதவீத நீர்ச்சத்து உள்ளது. இதில் உள்ள வைட்டமின் சத்துக்கள் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றவை.
*புரோகோலியில் 90.7 சதவீத நீர்ச்சத்து உள்ளது. புரோகோலியில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இதுவும் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
*ஸ்ட்ராபெர்ரியில் 90.7 சதவீத நீர்ச்சத்து உள்ளது. ரத்தத்தை அடர்த்தியாக்கும் இரும்புச்சத்து நிறைந்தது.
*கீரைகளில் 91.4 சதவீத நீர்ச்சத்து உள்ளது. மேலும், இதில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வைட்டமின்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் உடலுக்கு மிகவும் அவசியமானவை.
கோடை காலத்தில் இந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் நீர்ச்சத்து எப்போதும் நிறைந்திருக்கும். உற்சாகமும் புத்துணர்வும் ததும்பும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக