கடந்த 2017, பிப். 16ம் தேதி எடப்பாடி கே பழனிசாமி தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். அவரின் தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
இந்த அரசு அறிவித்த பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை, பொங்கல் பரிசு திட்டம் ஆகியவை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
மேலும் பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது அவற்றில் சில
*விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
*மீனவர்கள் வீட்டுவசதி திட்டத்தில் ரூ.1,75,000 வீதம் 5,000 வீடுகள் கட்ட ஆணை.
*குடிநீர் பற்றாக்குறையை போக்க பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.100 கோடி விடுவிக்கப்பட்டுள்ளன.
*மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
*மீனவர்கள் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் ரூ.1.75 லட்சம் செலவில் 5 ஆயிரம் வீடுகள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
*வேளாண் உற்பத்தி அதிகரித்து 1,58,000 விவசாயிகளுக்கு ரூ.882 கோடி பயிர்க்கடன்.
*தென்னையில் இருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
*ஆயிரத்து 161 இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
*வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
*ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 187 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
*பள்ளிக் கல்வித்துறை மூலம் 10ம் வகுப்பு 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டது.
*ரூ.200 கோடி செலவில் அம்மா வாகன திட்டத்தில் முதல்வர் கையெழுத்து போட்டு தமிழகம் முழுவதும் 169 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
*ரூ.65 கோடியில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
*போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை ரூ.1,250 கோடி ஒதுக்கீடு.
*400 கோடியில் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள்.
*தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்வு.
*ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க 4,900 மெட்ரிக் டன் அரிசி வழங்கல்.
*விழுப்புரம், ராமதாதபுரம், தருமபுரியில் புதிய சட்டக்கல்லூரி தொடங்க அனுமதி.
*தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களுக்கு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கத் தொகை.
*உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.3 லட்சத்து 431 கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஈர்த்தது.
*புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடி நிவாரணப் பணிகள்.
*மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு மாணவர் நலத்திட்டங்கள்.
என எண்ணற்ற மக்கள் நலத்திட்டப் பணிகளை பல்வேறு துறைகளின் மூலம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது
குடும்பம்:
எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், நெருங்குளம் ஊராட்சி, சிலுவம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவர், பி.எஸ்.சி., படித்துள்ளார்.இவருக்கு ராதா என்ற மனைவியும், மிதுன்குமார் (பி.இ.,) என்ற மகனும் உள்ளனர்.1972ல், அ.தி.மு.க.,வில் இணைந்து, சிலுவம்பாளையம் கிளை செயலாளராகவும், 1983ல் ஒன்றிய இணை செயலாளராகவும், அ.தி.மு.க., வில் பதவி வகித்தார்.
இவர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோர் கருப்ப கவுண்டர், தாசியம்மாள் ஆவார்.
விருதுகள்:
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்ட எண்ணற்ற மக்கள் நலத்திட்டப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.
இதில் ஒட்டுமொத்த செயல்பாடு, சட்டம் ஒழுங்கு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்திற்கு இந்தியா டுடே பத்திரிகையின் நான்கு விருதுகள்.
நெல், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய உற்பத்தியில் தமிழ்நாடு அரசு சாதனை புரிந்தமைக்காக மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதுகள்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் முதன்மை மாநிலத்திற்கான மத்திய அரசின் விருது.
பெங்களூரைச் சேர்ந்த பொது விவகார மையம் என்ற அமைப்பு சார்பில் சமூக பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு ஆளுமையில் இரண்டாமிடம்.
பொது விநியோகத் திட்டத்தினை முழுமையாக கணினிமயமாக்கியதற்காக விருது. கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி மாநகராட்சிகளுக்கு சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மற்றும் பன்னாட்டு விருதுகள்.
"பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு இந்தியாவின் முதன்மை மாநிலத்திற்கான விருது என பல்வேறு விருதுகளையும் அங்கீகாரங்களையும் தமிழ்நாடு அரசு பெற்று தொடர்ந்து முன்னேறி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக