Our website provides health tips, general knowledge, education, science, cooking tips, history etc. Our website was created for people.

செவ்வாய், 22 டிசம்பர், 2020

மிளகின் மருத்துவ குணங்கள் || Benefits of pepper || health tips in tamil


          இன்று தமிழக மக்கள் சித்தா, ஆயுர்வேதம், இயற்கை, அக்குபஞ்சர், ஒமியோபதி என பலவகை மருத்துவ முறைகளை அறிந்து, விழிப்புணர்வு பெற்று அதன் மூலம் பயன்பெற்று வருகின்றனர். அரசும் இதற்கென கல்லூரிகளை நிறுவி பலருக்கு இலவச மருத்துவம் செய்து வருகிறது.

        இதில் சித்த வைத்தியத்தால் அனைத்து நோய்களும் குணமாகி வருகின்றன. மூட்டுவலி, ஆஸ்துமா, நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் நன்கு குணமாகிறது என பயன்படுத்துவோர் கூறுகின்றனர்.

        சித்த வைத்திய முறைப்படி வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், சீரகம், மிளகு, புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி, கடுகு, இஞ்சி, சுக்கு, புளி, எலுமிச்சை போன்றவற்றை தினமும் அளவுடன் எடுத்துக் கொண்டால் பல நோய்களுக்கு மருந்தாகும் எனக் கூறுகின்றனர். இதை தனித்தனியே பயன்படுத்துவோரும், பல உணவுகளில் சேர்த்து பயன்பெறுவோரும் உள்ளனர்.


       வெளிநாடுகளில் எதை சாப்பிட அமர்ந்தாலும் முதலில் நம் ரசம் போன்ற மிளகு சேர்த்த 'சூப்' குடிப்பார்கள். காரணம் அதன் மருத்துவ குணம் அறிந்ததால்தான் பலவகை சூப்புகள், இனிப்பு சேர்க்காத தேனீர், தேன் கலந்த நீரைக் குடித்து நோய்களை எதிர்த்து போராடி வெற்றி  பெறுகின்றனர். மிக ஆரோக்கியமாக உள்ளனர். அந்த சூப்பின் மறுவடிவமே ரசம் ஆகும்.


         தமிழ்நாட்டில் மதியம், இரவு இரண்டு வேளையும், அரிசி உணவு சாப்பிடுவோர் இந்த அரும்பொருட்கள் சேர்ந்த ரசம் சேர்த்து சாப்பிடுவதும், அதை சூடாக ஒரு டம்ளர் குடிப்பதையும் இன்றும் வழக்கமாய் வைத்துள்ளனர். இது பல நோய்களுக்கு அருமருந்தாய் அமைகிறது. எனவே அதிகம் ரசம் சாப்பிடுங்கள்.அதுவும் கீழே கண்ட பத்து பொருட்களையும் சேர்த்து  தயாரிக்கும் ரசத்தை சேர்த்து கொள்ளுங்கள். சாப்பாட்டில் கடைசியில் ரசம் எடுத்து கொண்டால் சாப்பாட்டின் தீய விளைவுகளை சரிசெய்து விடும். 100 சதவீதம் உணவு மருந்து என்பதற்கு ரசம் உதாரணம். பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, பித்தம் போன்றவை மறையும்.நல்ல பசி இருக்கும். ஜலதோசம், இருமல் கட்டுப்படும். நாவறட்சி, பித்தம் ஆகியவற்றை குணப்படுத்தும். ரசத்தில் சிறிதளவு கீழ்கண்டவற்றை சேருங்கள்.


1. எலுமிச்சை : அரை எலுமிச்சை பழத்தை ரசத்தில் சேர்த்தால் ருசியாக இருக்கும்.

2. புதினா : இது மூலிகை பினிக் போல் பயன்தரும்.

3. கொத்துமல்லி இலை: காய்ச்சலுக்கு மருந்தாகும். சிறுநீர் வெளியேறும்.

4. கடுகு: குடைச்சல், தலைசுற்றல் வராது.

5. மிளகு : ஜலதோஷம், இருமல், காய்ச்சல், நரம்பு தளர்ச்சி, மலட்டு தன்மைக்கு அருமருந்து.

6. இஞ்சி : தலைவலி, வறட்டு இருமல், மூக்கு ஒழுகுதல் குணமாகும்.

7. வெள்ளைப் பூண்டு : இதயத்திற்கு நல்லது. குடல் பூச்சி அழியும். சிறுநீரக கற்கள், கல்லீரல் கோளாறு கட்டுப்படும்.

8. கறிவேப்பிலை : செரிமானம், நீரழிவு, சிறுநீரக பிரச்சனைக்கு மருந்தாகும்.

9. பெருங்காயம் : மூளைக்கு நல்லது.

10.சீரகம்: ஆஸ்துமா, சளி, கண்கோளாறுகளுக்கு நல்லது. புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், தக்காளி ரசம் என பல வகைகளாக இவற்றை சேர்த்து தயாரித்து பயன்படுத்துங்கள்.

Click here to watch more useful information



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Page Links