வேலை வாய்ப்பு!
கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:Specialist officers.
மொத்த இடங்கள்:220.
பணியிடங்கள் விவரம்: Backup Administrator-5, BI Specialist-5, Antivirus Administrator-5, Network Administrator-10, Database Administrator-12, Developer/Programmers-25, System Administrator-21, SOC Analyst-4, Manager-43, Cost Accountant-1, Chartered Accountant-20, Manager- Finance-21, Information Security Analyst-4, Ethical Hackers & Penetration Testers-2, Cyber Forensic Analyst-2, Data Mining Experts-2, OFSAA Administrator-2, OFSS Techno Functional-5, Base-24, Administrator-2, Storage Administrator-4, Middleware Administrator-5, Data Analyst-2, Manager-13, Senior Manager-1.
கல்வித்தகுதி:
Manager (Law): ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் மூன்று வருட அல்லது ஐந்து வருட சட்டப்படிப்பை முடித்து 3 வருட வழக்கறிஞர் பணி அனுபவம்.
Cost Accountant:ICWA படிப்பை முடித்து இரண்டு வருட பணி அனுபவம்.
Chartered Accountant:
C.A. பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம்.
Manager (Finance) பட்டம் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் நிதி பாடத்தில் முதுநிலை டிப்ளமோ மற்றும் 2 வருட பணி அனுபவம்.
இதர பணிகளுக்கு: Computer Science/ Computer Engineering/ Computer Science & Technology/ Information Science/
Electronics & Communication ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 60% தேர்ச்சியுடன் பி.இ.,/ பி.டெக். அல்லது 60% தேர்ச்சியுடன் எம்சிஏ.
விண்ணப்பக் கட்டணம்: ₹600ஐ (எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு ₹100) ஆன்லைனில் செலுத்தி www.canarabank.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.12.2020.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக