விஜய்யின் மாஸ்டர் படம் ஜனவரி 13-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் ஓடிடியில் வெளியாகிறது என தகவல் பரவியது. இதை படத்தின் தயாரிப்பாளர்கள் மறுத்தனர். மாஸ்டர் படம் தியேட்டரில்தான் வெளியாகும் என அறிக்கை வெளியிட்டனர். பொங்கலுக்கு எப்படியும் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் படக்குழு உள்ளது. இதனால் ஜனவரி 13-ம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். தற்போது 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் தியேட்டரில் அனுமதிக்கப்படுகிறார்கள். இதை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசிடம் மாஸ்டர் படக்குழு கோரிக்கை வைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக