தினமும் முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவி வரவும். இதனால் அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு சென்று, சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் வைக்கிறது.
முதலில் அரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ளவும். பின் அதனை சுத்தமான நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து,அந்த நீரை வடிகட்டி சேகரித்து, அந்நீரால் முகம் மற்றும் கூந்தலைப் பராமரிக்கலாம்.
அரிசி கழுவிய நீரைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும் அடைபடும். காட்டன் துணியை அரிசி கழுவிய நீரில் நனைத்து, பின் அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுக்கவும்.
இது போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள subscribe buttonஐ கிளிக் செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக