பருவநிலை மாற்றத்தால் அன்றாட நிகழ்வுகளில் பெரிய மாற்றத்தை சமீபகாலமாகக் காணமுடிகிறது. இதனால் மழைக்காலத்தில் வெயிலும், வெயில் காலத்தில் மழையும், புவி மேற்பரப்பில் காணப்படும் தட்பவெட்பநிலை,பூமியை வந்தடையும் சூரிய ஒளி அளவில்மாற்றம் ஆகியவை ஏற்பட்டு, இதன் காரணமாக கடல்நீர் மட்டம் உயர்கிறது.
சூரியன், நமது முன்னோர்கள் கடவுளாகப் பார்த்த ஒன்று. ஆனால் இப்போது சூரியனை ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. சூரியன் பல வாயுப் பொருள்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். புவியிலிருந்து ஏறக்குறைய 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சூரியன் புவி வெப்பமடைதலை
ஏற்படுத்துகிறதா?
இல்லை, சூரியன் பூமியின் காலநிலையை பாதிக்கக்கூடும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நாம் கண்ட வெப்பமயமாதல் போக்குக்கு இது பொறுப்பல்ல. சூரியன் உயிரைக் கொடுப்பவன். இது உயிர்வாழும் அளவுக்கு கிரகத்தை சூடாக வைத்திருக்க உதவுகிறது.
1978ஆம் ஆண்டு முதல், விஞ்ஞானிகள் செயற்கைக் கோள்களில் சென்சார்களைப் பயன்படுத்தி, வளிமண்டலத்தில் சூரியனின் ஆற்றலைக் கண்காணித்து வருகின்றனர். இதில் தெரியவந்தது என்னவெனில், சூரியனிலிருந்து வரும் ஆற்றல் பூமியை அடையும் அளவிற்கு மேல்நோக்கிச் செல்வது இல்லை. ஏன் செல்வது இல்லை என்பது பசுங்குடில் விளைவு (Greenhouse effect) மூலம் தெரியலாம். இதன் காரணமாகத்தான் புவி வெப்பமடைகிறது.
பசுமைக்குடில் வாயுக்கள் பூமியின் வளிமண்டலத்தில் ஒரு போர்வைபோல மூடி இருக்கிறது.
பசுமைக்குடில் வாயுக்களில் முக்கியமான வாயு கரியமில வாயுவாகும். புவி வெப்பமாதலுக்கு இதுவே முக்கிய காரணமாகும்.
மனிதர்களின் வாழ்வில் நவீனமயமாதல் (தொழிற்சாலைகள், வாகனங்கள்) காரணங்களால் வெளியாகும் கரியமில வாயுக்களின் எண்ணிக்கை வளிமண்டலத்தில் 30% அதிகரித்துள்ளது.
புவியின் பருவநிலை மாற்றம் மோசமான அளவுக்கு அதிகரிக்கும் வகையில் பசுமைக்குடில் வாயுக்கள் (கரியமில வாயு, நீராவி, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்களின் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே குவிந்துள்ள கரியமில வாயுவை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளுதல் வேண்டும்.
இனி "சுட்டெரிக்கும் சூரியன் என்று சூரியனைத் திட்டுவதை நிறுத்திவிட்டு மனிதர்களின் நடவடிக்கைகள், இயற்கையைப் பாதுகாத்தல் என ஒவ்வொருவரும் எடுக்கும் சிறிய முயற்சியும் முக்கியமாகும்.
இது போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள subscribe buttonஐ கிளிக் செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக