அக்டோபர்-1:
சினிமா பல்கலைக்கழகம் 'செவாலியே” சிவாஜி:
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த தங்கப்பதக்கம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையை சொந்த ஊராகக் கொண்ட சிவாஜி கணேசன், விழுப்புரத்தில் சின்னையா மன்றாயர், ராஜாமணி அம்மையார் தம்பதியரின் மகனாக 1927- ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி பிறந்தார்.
இளம் வயதிலேயே நாடகத்தின் வாயிலாக கலைத்துறையில் நுழைந்தவர் கணேசன். அவர் முதலில் 'மனோகரா' நாடகத்தில் பெண் வேடம் அணிந்து நடித்தார்.
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் அண்ணா எழுதிய நாடகத்தில் மராட்டிய மன்னர் சிவாஜியாக நடித்த வி.சி.கணேசனின் நடிப்புத்திறனை கண்டு வியந்து தந்தை பெரியார், அவரை முதன் முதலாக 'சிவாஜி கணேசன்' என்று அழைத்து மகிழ்ந்தார். அந்த பெயர் காலத்தால் நிலைத்து விட்டது என்றும் மக்கள் மனதில்.
அக்டோபர்-2: மகாத்மா காந்தியடிகள்:
1869 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர் என்னும் ஊரில் அக்டோபர் 2 ஆம் நாள் பிறந்தவர். முழுப்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.
தந்தையார் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய் காந்தி.
கலங்கரை விளக்கம் கர்மவீரர் காமராசர் :
காமராசர் விருது நகர் மாவட்டம், விருதுப்பட்டி கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 நாள் பிறந்தார்.
தந்தையார் குமாரசாமி. தாயார் சிவகாமி அம்மாள். அவரால் பிரதமாக்கப்பட்ட அன்னை இந்திராகாந்தி அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியபோது மிகவும் மன வேதனையடைந்தவர்.
இவர் உயர்ந்த பதவிகளை வகித்தபோதும் தனக்கென சொந்தமாக ஒரு வீடோ, பணமோ சேர்த்து வைக்காமல் வாடகை வீட்டிலேயே இருந்தார். காமராசர் இறந்தபோது அவரது உடமையாக இருந்தது. மூன்று கதர் சட்டைகளும், மூன்று கதர் வேட்டிகளும், இரண்டு கதர் துண்டுளுமே, இவ்வாறு நாட்டு மக்களால் கல்வி கண் திறந்த கர்ம வீரர் காலாகாந்தி என்றெல்லாம் போற்றிய புகழப்பட்ட காமராசர், தேசபக்தர் காந்தி மகான் பிறந்த அக்டோபர்-2ஆம் தேதி 1975 ஆம் ஆண்டு காலமானார்.
லால் பகதூர் சாஸ்திரி:
1904 ஆம் ஆண்டு அக்டோபர் 2ம் நாள் தந்தை சாரதாபிரசாத், தாயார் ராம்துலாதி தம்பதிகளுக்கு மகனாக காந்தி பிறந்த தினத்தில் பிறந்தார் லால் பகதூர் சாஸ்திரி.
காசிக்கு அருகில் உள்ள மோகல் சராய் என்பதே இவர் பிறந்த ஊர்.
உத்திரபிரதேசத்தில் 1952-இல் சட்டசபைத் தேர்தலில் வென்று நேருவின் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராகப் பணி செய்தார். 1957-ல் அரியலூரில் ரயில் விபத்திற்காக பதவியை துறந்தார். பிறகு நேரு மறைவிற்கு பின் இந்தியாவின் 2வது பிரதமராக 1964-ல் காமராஜர் அவர்களால் பிரதமராக்கப்பட்டார்.
அக்டோபர்-3:
மா.பொ.சிவஞானம்:
சிலம்பு செய்வர் மா.பொ.சி என்று அழைக்கப்பெற்ற தமிழ் சுடர் மா.பொ.சிவஞானம் அவர்கள் ஆவார்.
இவர் சுதந்திர போராட்ட தியாகி தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர் தமிழ்நாடு தமிழனுக்கே என்று முழங்கியவர். இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர். தமிழ் வளர்த்த தமிழ் தலையகம் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற கூட்டுக்கு இலக்கணம் வகுத்தவர் உழவர். இவர் அக்டோபர் 3-ஆம் நாள் இயற்கை அடைந்தார். அவர் மரண செய்தி தமிழர்களுக்குள்ளும் பெரும் இடியாக இருந்தது.
அக்டோபர்-4:
கொடிகாத்த திருப்பூர் குமரன்:
கோவை மாவட்டம், திருப்பூரில் ஏழைக் குடும்பத்தில்தான் தியாகி கொடிகாத்த குமரன் பிறந்தார். தந்தை நாச்சிமுத்து, கருப்பாயி அம்மாள். 1904-ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி பிறந்தார். திருப்பூரில் உள்ள சென்னிமலைதான் சொந்த ஊர் ஆகும்.
அக்டோபர்-5:
வள்ளலார்:
அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை என்றும் வள்ளலார் என்றும் மக்களால் போற்றப்பட்ட மகான் இராமலிங்க வள்ளலார் ஆவார். இவர் சிதம்பரத்திற்கு வடமேற்குப் பகுதியில் உள்ள சிற்றுவூராண மடுதூர் கிராமத்தில் இராமையா பிள்ளை-சின்னம்மை தம்பதியருக்கு 05.10.1823 அன்று பிறந்தார்.
1874-ல் மேட்டுக்குப்பத்தில் உள்ள வீட்டில் ஜீவசமாதி அடைந்தார்.அக்டோபர்-15:
கலாம்:
இந்தியாவின் குடியரசுத் தலைவராக முதன் முதலாக அறிவியல் துறையைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்று அப்பதவிக்கே பெருமை சேர்த்தவர். இவர் சாதாரண படகோட்டியின் மைந்தன். அவர்தான் டாக்டர். ஆவுள் பக்கீர்த் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம். முதலில் இவர் ஒரு விஞ்ஞானி, அதன் பின் இந்தியாவின் முதல் குடிமகன். முப்படை தளபதியானார்.
இவர் 1931ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தாய் ஆஷியம்மா தந்தை ஜெய்னுலாபுதீன். இவர்களுக்கு அக்டோபர் 15-ஆம் தேதி மகனாக பிறந்தார்.
அக்டோபர் -16:
வீரபாண்டிய கட்டபொம்மன் :
வணிகத்திற்காக வந்த ஆங்கிலேயர்கள் இங்கே இருந்த அரசியல் சூழ்நிலையில் அதில் தலையிட்டு முதலில் வரி வசூல் செய்யும் உரிமை என்ற வகையில் தலையிட்டனர். சிலர் கப்பம் செலுத்தி சமாதானம் செய்து கொண்டது. அவர்களை மேலும் ஊக்கப்படுத்தியது. ஆன போதும் ஆங்காங்கே பலமான எதிர்ப்புக் குரல், சுதந்திர உணர்வில் அன்றே ஒலிக்க ஆரம்பித்தது. வானம் பொழிகிறது பூமி விளைகிறது. உனக்கேன் கொடுக்க வேண்டும் கிஸ்தி? என வீர முழக்கமிட்டு பலமாக எதிர்ப்புக்காட்டி போரிட்டு இறுதியில் தூக்கு மேடையை முத்தமிட்ட சமயத்திலும் வீரம் காட்டிய வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற அழியாத பெயர் இந்தி சுதந்திர போராட்ட வரலாற்றில் முதலிடம் பெறுகிறது எனலாம். ஏதும் இல்லை. இவரது வரலாறு ஒரு வீர வரலாறு.
ஆயுதம் இல்லாத நிலையில் சிறைபிடிக்கப்பட்டான் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 16இல் ஆங்கிலேயர்களால் கயத்தாறு என்ற இடத்தில் உள்ள புளிய மரத்தில் தூக்கில் இடப்பட்டார். அதே சமயத்தில் அவரின் இறுதி உரையில் வீரமும் இருந்தது.
அக்டோபர்-17:
கவியரசு கண்ணதாசன்:
காரைகுடியில் பிறந்து சென்னையில் குடியேறி நாடகத்தில் நடித்து, சினிமாவில் எழுதி, கதையாசிரியர், வசனகர்த்தான், அரசியல்வாதி, நடிகர் என பன்முகளாளர் ஆவார். கவியரசு கண்ணதாசன் காலத்தினால் அழியாத சினிமா பாடல்கள் காவியங்களை விட்டு சென்ற கவிஞர் அவர் அக்டோபர் மாதம் 17ஆம் நாள் பிறந்தார்.
அக்டோபர்-22:
சர்தார் வல்லபாய்பட்டேல்:
இவர் குஜராத் மாநிலம், கேரள மாவட்டத்தைச் சேர்ந்த சாம்சந்த் என்ற ஊரில் அக்டோபர் 1875ஆம் ஆண்டு 22ஆம் நாள் ஜிவெர் பாஸ் லத்பா பட்டேல் தம்பதியனருக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை, ஜான்சிராணி தனலட்சுமிபாயின் படையில் சேர்ந்து பணியாற்றினார்.
வல்லபாய் பட்டேல், சிறு வயதிலேயே அந்தியைக் கண்டு ஆத்திரப்படுவார் நியாயத்திற்காக போராடும் மன உறுதியைப் பெற்றவர் இளமையிலேயே நுண்ணறிவுத்திறன் மிக்கவராக இருந்தார். வழக்கறிஞராக இருந்த பட்டேல் வழக்குகளை சிறந்த முறையில் வாதாடி வெற்றி பெறுவார். அவரது வாதத்திறமை அனைவரையும் கவர்ந்தது, லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.
அக்டோபர்-27
மருது சகோதரர்கள்:
மருது பாண்டியர், மருது சகோதரர்கள், மருதிருவர் என்று அழைக்கப்படுவர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் அண்ணன் பெரியமருது என்றும், தம்பி சின்னமருது என்றும் அன்புடன் அழைக்கப்பட்டனர். ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு வீரமரணம் அடைந்த தியாக சீலர்கள் வரிசையில் மறக்க முடியாத வரலாற்று நாயகர்களில் இவர்கள் பெயரும் அழியாத இடம்பெறுகிறது.
கட்டபொம்மன் எட்டப்பன் காட்டிக் கொடுத்தது போல நய வஞ்சகர்களால் இவர்களும் காட்டிக் கொடுக்கப்பட்டனர்.
1801-அக்டோபர் 27இல் மருது பாண்டியர் தூக்கில் போடப்பட்டு இருந்தனர். வீரத்தால் போரால் அழிக்க முடியாத இவர்கள் உயிர் மருது பாண்டியர் காவலர்களில் ஒருவரான கறுதான் என்பவனின் தலைமையில்-பண ஆசையால் இவர்கள் வீழ்ந்தனர். இவனால் சின்ன மருது ஆங்கிலேயர் வசமானானர். ஆனபோதும் பெரியமருதுவை அவர்களால் சிறை செய்ய முடியவில்லை.
அக்டோபர்-30
பசும்பொன்:
தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் என்ற ஊரின் வடமேற்கில் உள்ள கல்லுப்பட்டி என்னும் ஊரில் 1908-ல் அக்டோபர் 30-ஆம் தேதி பிறந்தார். தந்தை உக்கிரம பாண்டித் தேவர். தாயார் இந்திராணி அம்மையார். 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 29ம் நாள் இறைவன்திருவடியடைந்தார்.
அக்டோபர்-31
அன்னை இந்திராகாந்தி:
அலகாபாத்திலுள்ள ஆனந்த பவனம் என்ற அழகிய அரண்மனைதான் இந்திராகாந்தி பிறந்த இடமாகும். 1917-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் நாள் இந்திரா காந்தி பிறந்தார்.
முதல் பெண் பிரதமர் இரும்பு பெண் மணி 10.01.1966 அன்று தனுஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்து ஆன அன்று இயற்கை எய்திய லால்பகதூர் சாஸ்திரி அவர்களுக்குப் பின்னர் இந்திரா அவர்கள் 3வது இந்தியப் பிரமராகத் தேர்வு செய்யப்பட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட மொரார்ஜி அவர்களை விடவும் 186 வாக்குகள் பெற்று மகத்தான வெற்றி பெற்றார். இவ்விதமாக 24.01.1966 அன்று பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் நாள் காலை 9.35 மணியளவில் தன் வீட்டிலிருந்து சில அன்பர்களுடன் வந்து கொண்டிருந்த போது கொடியவர்கள் அன்னை அவர்களை அதுவரை காத்து வந்தவர்கள் அதிகாரங்களின் கையாட்களாக மாறி அன்னை இந்திரா அவர்களை சுட்டுக்கொன்றுவிட்டார்கள்.
காந்தியடிகளைப் போன்று இந்திராகாந்தி அவர்களும் கொடியவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள subscribe buttonஐ கிளிக் செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக