தேவையானவை: இட்லி - 15, காய்ந்த மிளகாய் - 6, பெரிய
வெங்காயம் - 2, கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 10, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் மற்றும் உப்பு -
தேவைக்கேற்ப.
செய்முறை: காலையில் செய்த இட்லியை, மாலைநேர டிபனாக
ரசித்து ருசிக்கலாம். இட்லிகளை உதிரியாக உதிர்த்துக்
கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும்,
கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். கடுகு வெடித்ததும்
பெருங்காயத்தூள் சேர்க்கவும். காய்ந்த மிளகாயை சிறு
துண்டுகளாக கிள்ளிப் போட்டுத் தாளிக்கவும். முந்திரிப்பருப்பை
சிறு துண்டுகளாக உடைத்து சேர்த்து வதக்கவும். பின் உப்பு ஒரு
சிட்டிகை சேர்த்து, வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன்
கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி உதிர்த்து வைத்துள்ள இட்லியைச்
சேர்த்துக் கிளறி இறக்கி விடவும்.
(இட்லி உப்புமா சாப்பிடும்போதே சூரிய வம்சம் படத்தில்
இடம் பெற்ற காட்சி நினைவுக்கு வருகிறதுதானே! மகள்
(தேவயானி) செய்திருந்த இட்லி உப்புமா பற்றி, நடிகர்
ஜெய்கணேஷ் தன் மனைவியிடம் ரொம்பவும் சிலாகித்துப்
பேசுவாரே. அது.. அது.. அதே தான்!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக