சாதாரணமாக வீடுகளில் மாமியாரால் மருமகளுக்கு, மருமகளால்
மாமியாருக்கு, பிள்ளைகளால் பெற்றோருக்கு, பெற்றோரால்
பிள்ளைகளுக்கு என ஒரே ஸ்ட்ரெஸ் மயமாக ஆகிவிட்ட இந்தக்
காலத்தில், அதைக் குறைக்கும் சூப்பர் ஆற்றல் துளசிக்கு உண்டு.
ஸ்ட்ரெஸ் அதிகமாக உள்ளவர்கள், துளசி இலைகளைப் பறித்து
வந்து, நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தினசரி
10 இலைகள் வீதம் சாப்பிட்டு வந்தால், மனதின் இறுக்கமும் அழுத்தமும்
வெகுவாகக் குறையும். மன உளைச்சலின் அளவு குறையும்போது, ஒரு
விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்வதும், அணுகுவதும் சிரமம்
இல்லாமல் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக