Our website provides health tips, general knowledge, education, science, cooking tips, history etc. Our website was created for people.

சனி, 18 ஏப்ரல், 2020

அதிக வட்டி தரும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்

அஞ்சலக சேமிப்பு

இந்தியாவின் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான                                       வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த திட்டங்களில் அஞ்சலக திட்டங்கள் (Post Office schemes), இந்திய அரசு திட்டங்கள் என அனைத்தும் அடக்கம். இதில் மூத்த குடிமகன்களுக்கான திட்டங்களைப் பற்றியும் கொஞ்சம் பார்ப்போம்.

5 வருட மூத்த குடிமகன்களுக்கான
சேமிப்பு திட்டம்.

             நடுத்தர மக்களுக்கு ஆர்டி என்றால் மூத்த குடிமக்களுக்கு இந்த ஐந்து வருட மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம். இந்திய அஞ்சலகங்கள் நடத்தும் சிறந்த திட்டங்களில் இதுவும் ஒன்று.
பெரும்பாலான நடுத்தர பதவிகளில் இருக்கும் அரசு ஊழியர்களின் திட்டம் இது. இந்த திட்டத்துக்கான வட்டி விகிதம் கடந்த காலாண்டைப் போலவே இந்த காலாண்டுக்கும் 8.7% ஆகவே வைத்திருக்கிறார்கள். இந்திய சிறு
சேமிப்புத் திட்டங்களிலேயே அதிக வட்டி விகிதம் பெறும் திட்டம் இது தான். இந்த திட்டத்தில் வட்டி ஒவ்வொரு காலாண்டுக்கும் கணக்கிடப்படும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - 1

1. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இந்த
திட்டத்தில் இணையலாம்.
 2. 55 வயதுக்கு மேல்
வி ஆர் எஸ் முறையில் ஓய்வு பெற்றவர்கள், ஓய்வு கால சலுகைகளைப் பெற்று ஒரு மாதத்துக்குள்
இந்த திட்டத்தில் இணையலாம்.
 3. ஒருவர்  ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கென தனியாகவோ,
இணைந்தோ (மனைவி அல்லது கணவனோடு மட்டும்) இயக்கலாம். ஆனால் உச்ச வரம்பான 15
லட்சத்தை கணக்கில் கொண்டு தான் அடுத்தடுத்த கணக்குகள் தொடங்கப்படும்.
 4. இந்த திட்டத்தில்
ஒரு லட்சம் ரூபாய் வரை ரொக்கமாகவோ அல்லது
ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் காசோலை மூலம்
செலுத்தியோ கணக்கைத் தொடங்கலாம்.
5. நாமினேஷன் வசதி உண்டு.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - 2

1. இந்தியாவின் எந்த அஞ்சலகத்துக்கு
வேண்டுமானாலும் கணக்கை மாற்றிக்
கொள்ளலாம்.
 2. இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு
திட்டத்துக்கான வட்டி, அஞ்சலக சேமிப்பு
கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
3.ஒவ்வொரு
காலாண்டுக்கும் ஒரு முறை வட்டி கணக்கிடப்
படும்.
4. பணத்தை முதிர்ச்சி காலத்துக்கு முன்
கூட்டியே எடுக்கலாம். டெபாசிட் கணக்கு
தொடங்கி ஒரு வருடத்துக்குள் என்றால்,
டெபாசிட் தொகையில் 1.5% கழித்துக் கொண்டு
தருவார்கள். இதுவே இரண்டு வருடத்துக்குள் என்றால் 1 சதவீதம் டெபாசிட் தொகை கழித்துக்
கொண்டு தருவார்கள்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்
தொகையை 80சி வருமான வரிச் சட்டத்தின் கீழ்
வரி செலுத்த வேண்டாம். இந்த சேமிப்பு
திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டி தொகை
ஒரு நிதி ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு மேல்
போனால் டிடிஎஸ் பிடித்தம் செய்வார்கள்.

5 வருட மாத வருமான கணக்கு.

                   பென்ஷன் மற்றும் வட்டி வருமானத்தை
மட்டுமே எதிர்பார்த்து மாதங்களை ஓட்டும்
நடுத்தர பென்ஷனர்களின் பொன்னான திட்டம்
இது. இந்த திட்டத்துக்கான வட்டி விகிதமும்
கடந்த காலாண்டை போலவே இந்த
காலாண்டுக்கும் 7.7%-ல் மாற்றம் இல்லை . இந்த
திட்டத்தில் வட்டி மாதாமாதம் கணக்கிடப்படும்.

மாத வருமான திட்டம் 1.

1.குறைந்த பட்ச தொகை 1500, அதிகபட்ச
தொகை 4,50,000, ஜாயின் அக்கவுண்ட் என்றால்
அதிகபட்சம் 9,00,000.
2. ஜாயின் அக்கவுண்டில்
வரும் வட்டி இருவருக்கு சரி சமமாக பிரித்துக்
கணக்கிடப்படும்.
 3. யார் வேண்டுமானாலும் இந்த கணக்கைத் தொடங்கலாம்.
4. கணக்கை ரொக்கம்
வழியாகவோ, காசோலை வழியாகவோ தொடங்கலாம். நாமினேஷன் வசதி உண்டு. 5. இந்தியாவின்
எந்த அஞ்சலகத்துக்கும் கணக்கை மாற்றம் செய்து
கொள்ளலாம்.
6. தனி கணக்கை, ஜாயிண்ட்
கணக்காகவும், ஜாயிண்ட் கணக்கை தனி
கணக்காகவும் மாற்றிக் கொள்ளலாம்.

மாத வருமான திட்டம் 2

1. முதிர்ச்சிக் காலம் ஐந்து ஆண்டுகள். அதற்கு
இடையிலேயே மாதாமாதம் வட்டி கணக்கிட்டு
சேமிப்பு கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
2.பணத்தை முதிர்ச்சி காலத்துக்கு முன் கூட்டியே
எடுக்கலாம். டெபாசிட் கணக்கு தொடங்கி 3
வருடத்துக்குள் என்றால், டெபாசிட் தொகையில்
2% கழித்துக் கொண்டு தருவார்கள். இதுவே3
வருடத்துக்கு மேல் என்றால் 1% டெபாசிட்
தொகை கழித்துக் கொண்டு தருவார்கள்.

5 வருட தேசிய சேமிப்பு சான்றிதழ்

கிஷான் விகாஸ் பத்ரா என்கிற இந்த திட்டத்துக்கான வட்டி ஆண்டுக்கு 8.0 சதவிகிதமாகவே
தொடர்கிறது. புதிய அறிவிப்பில் எந்த மற்றமும்
இல்லை . இந்த திட்டத்தில் முதலீடு
செய்பவர்களுக்கு வட்டி முதிர்ச்சிக் காலத்தில் தான்
வழங்கப்படும். ஆனால் வட்டி ஆண்டுக்கு ஆண்டு
கணக்கிடப்பட்டு, அந்த வட்டியும் மறு முதலீடு
செய்யப்படும்.

5 வருட தேசிய சேமிப்பு சான்றிதழ் -1

1. குறைந்தபட்ச முதலீட்டு தொகை 100 ரூபாய்.
இந்த பத்திரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு
வருமான வரிச் சட்டம் 80சி-ன் கீழ் வரி செலுத்தத்
தேவை இல்லை .
 2. ஒருவர் பெயரில் வாங்கும்
பத்திரத்தை, முதிர்ச்சிக் காலத்துக்கு முன் ஒரு
முறை மட்டும் வேறு ஒருவர் பெயருக்கு மாற்றலாம்.

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டு திட்டம்

எந்த நிறுவனத்திலும் வேலை பார்க்காத மக்கள்
தங்கள் பணத்தை பிஎஃப் திட்டங்களில் முதலீடு
செய்ய அரசு ஏற்படுத்திக் கொடுத்த வழி தான்,
பப்ளிப் ப்ராவிடெண்ட் ஃபண்டு. இந்த
திட்டத்துக்காக வட்டி கடந்த காலாண்டைப் போல
இந்த காலாண்டும் 8%-ஆகவே தொடர்கிறது.

விவசாய விகாஸ் பத்திரம்

இந்த விவசாயப் பத்திரத்துக்கான வட்டி 7.7
சதவிகிதமாகவே வைத்திருக்கிறார்கள். இந்த
பத்திரத்தில் முதலீடு செய்யும் தொகைக்கான
வட்டி 112 மாத கால முதிர்ச்சிக்கு பின் தான் வழங்கப்படும்.

சுகன்யா சம்ரித்தி கணக்கு திட்டம்.

இந்த திட்டத்துக்கான வட்டி விகிதம் அதே 8.5
சதவிகிதத்திலேயே வைத்திருக்கிறார்கள்.
இந்தியாவின் சிறு சேமிப்பு திட்டங்களில் மூத்த
குடிமக்கள் சேமிப்புத் திட்டத்துக்குப் பிறகு அதிக
வட்டி கிடைக்கும் திட்டம் இது தான்.
             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Page Links