விதைகளைப் பயன்படுத்துகிறார்கள். நாமும் இதைப் பின்பற்றலாம்.
காய்ந்த முருங்கைக் காயிலிருந்து விதைகளை மட்டும் தனியாக
எடுக்க வேண்டும். அதிலிருக்கும் மேல்தோலை எடுத்துவிட்டு
உள்ளிருக்கும் கொட்டைகளை மட்டும் சேகரிக்கவேண்டும். பின்னர்
இந்த விதைகளை ஒன்றிரண்டாக நசுக்கி, மிக்ஸியில் போட்டுப் பொடி
செய்துகொள்ள வேண்டும்.
ஒரு சிறிய கப்பில் சுத்தமான தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில்
இந்தப் பொடியைச் சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ள
வேண்டும். பிறகு இதனை ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டி
எடுத்தால்... பால் போன்ற திரவம் நமக்குக் கிடைக்கும்.
எந்த அசுத்தமான தண்ணீரை வடிகட்ட விரும்புகிறீர்களோ அதில்
இந்த பால் போன்ற திரவத்தை சேர்த்து, வேகமாக முப்பது விநாடிகள்
கலக்கவேண்டும். பின்னர் நிதானமான வேகத்தில் மறுபடியும் ஐந்து
நிமிடங்களுக்கு கலக்க வேண்டும். பின்னர் இந்தத் தண்ணீரை
மூடிவைத்து ஒரு மணி நேரத்துக்கும் மேல் அப்படியே வைக்கவேண்டும்.
பிறகு மூடியைத் திறந்து பார்த்தால், தண்ணீரின் அடியில் கசடுகள்
சேகரமாகி இருக்கும். மேலே தெளிந்த சுத்தமான தண்ணீர் இருக்கும்.
அதை மட்டும் கவனமாக வடிகட்டி எடுத்தால் சுத்தமான தண்ணீர்
கிடைத்து விடும்.
குறிப்பு: ஒரு லிட்டர் தண்ணீரைச் சுத்தப்படுத்த ஒரு டேபிள்ஸ்பூன்
முருங்கை விதைகள் தேவைப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக