மன அழுத்தத்தாலும் மனப்பதற்றத்தாலும் ஏற்படக்கூடிய தூக்கமின்மைக்கு பயன்படுத்தப்படும் பல மருந்துகள், நாள்பட்ட நிலையில் பல கேடுகளை விளைவிக்கக் கூடியதாக அமைகிறது. அந்த மருந்தை நிறுத்தும்போது, பழைய பிரச்சனைகள் பல மடங்கு பெரிதாகி, மனதைத் தாக்குவதற்கு வழி செய்கிறது. இந்நிலையில் தூக்கமின்மையை சரிசெய்ய ஜாதிக்காய் ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. ஜாதிக்காய் ஒரு பங்கு, கடுக்காய் ஒரு பங்கு, சுக்கு, மிளகு தலா கால் பங்கு, சீரகம், கருஞ்சீரகம் தலா அரை பங்கு ஆகியவற்றை இளம் வறுப்பாக வறுத்துப் பொடி செய்ய வேண்டும். இதில் அரை தேக்கரண்டி முதல் ஒரு தேக்கரண்டி வரை தேன் அல்லது தேங்காய்ப்பாலில் கலந்து சாப்பிட வேண்டும். இதனால் படிப்படியாக பதற்றம், மன அழுத்தம் குறைந்து, தூக்கமின்மையும் நீங்கி, பிரச்சனை எதுவாக இருந்தாலும் தெளிவாக முடிவு எடுக்கும் ஆற்றலும் மேம்படுகிறது.
புதன், 26 பிப்ரவரி, 2020
Tags
ஆரோக்கிய குறிப்புகள்#
Share This
About AbroseGani
ஆரோக்கிய குறிப்புகள்
Tags
ஆரோக்கிய குறிப்புகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக