இந்தக் காலத்தில் 40 வயதைத் தொட்டுவிட்டாலே, மூட்டு வலி ஏற்படுவது இயல்புதான் என்ற மனநிலையோடுதான் பலர் உள்ளனர். ஆனால், மஞ்சளைப் போதுமான அளவுக்கு உணவில் சேர்த்துக் கொண்டு வரும்போது, இந்த பிரச்சனை ஏற்படுவது இல்லை. தற்காலத்தில் மூட்டு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய பல நிலைகளிளலும் (Osteoarthritis Rheumatoid arthritis) மஞ்சள் உதவியாக இருக்கும். இதில் உள்ள தாவர வேதிப்பொருட்கள் வலி நீக்கும் ஆற்றல் பெற்றவை (anti-inflammatory). திரிபால சூரணம்- 100 கிராம், மஞ்சள் -50 கிராம், மிளகு -25 கிராம். இந்தப் பொடிகளைக் கலந்து வைத்துக் கொண்டு காலையிலும் மாலையிலும் தலா ஒரு தேக்கரண்டி தேங்காய்ப்பால் அல்லது பசு நெய்யுடன் கலந்து சாப்பிட மூட்டு வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். இதை வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முன் சாப்பிட வேண்டும். மூட்டு வலிக்காக மேற்கொள்ளும் வேறு எந்த மருத்துவத்துடனும் இந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளலாம்.
புதன், 26 பிப்ரவரி, 2020
மூட்டுவலி குணமாக வீட்டு மருத்துவம்
Tags
ஆரோக்கிய குறிப்புகள்#
Share This
About AbroseGani
ஆரோக்கிய குறிப்புகள்
Tags
ஆரோக்கிய குறிப்புகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக