தேவை: கோதுமை மாவு ஒரு கப், உப்பு ஒரு சிட்டிகை, தண்ணீர்-4 கப், சர்க்கரை-2 கப், நெய்-அரை கப்+2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள்-அரை டீஸ்பூன், முந்திரி ஒரு டீஸ்பூன், ஆரஞ்சு கலர்-அரை டீஸ்பூன், பச்சை கற்பூர தூள் ஒரு சிட்டிகை. செய்முறை: கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இத்துடன் 4 கப் தண்ணீர் சேர்த்து ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும். பின்பு நன்கு கலந்து அதன் பாலை எடுக்கவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்துக் கொள்ளவும். பின்பு அதே வாணலியில் கோதுமை பால், சர்க்கரை, ஆரஞ்சு கலர் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறவும். முந்திரி, பச்சை கற்பூர தூள் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி விடவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக