Our website provides health tips, general knowledge, education, science, cooking tips, history etc. Our website was created for people.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

சிக்கன் கட்லெட் செய்வது எப்படி?

 
சிக்கன் கட்லெட் செய்வது எப்படி?.                          
தேவையான பொருட்கள்: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு-2, எலும்பு இல்லாத சிக்கன் அரை கிலோ. இஞ்சி, பூண்டு விழுது 1-டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 1,  மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன்,மிளகாய்த்தூள் -தூள் 2 டீஸ்பூன், கரம் மசாலா தூள் ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி இலை -சிறிதளவு, முட்டை -2 , உப்பு தேவையான அளவு, பிரெட் தூள்-அரை கப், எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: சிக்கனை மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைக்கவும் . பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி, பிறகு அரைத்த சிக்கன், உப்பு சேர்த்து வதக்கவும். அடுப்பை மீடியமாக வைத்து சிக்கன் வெந்த பிறகு மிளகு தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.இக்கலவை நன்கு ஆறிய பிறகு மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து விடவும். ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். பிறகு சிக்கன் கலவையை உருண்டைப் பிடித்து கையில் வைத்து தட்டி, முட்டைக் கலவையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்க... சுவையான சிக்கன் கட்லெட் ரெடி! 
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Page Links