Our website provides health tips, general knowledge, education, science, cooking tips, history etc. Our website was created for people.

Facebook

Post Top Ad

சனி, 22 பிப்ரவரி, 2020

மீசை தாடி சீக்கிரம் வளர என்ன செய்ய வேண்டும்

       
தாடி மீசை வேகமாக வளர என்ன செய்ய வேண்டும்
ஆண்களுக்கு அழகே மீசை தான். பொதுவாக பெண்களுக்கு மீசை மற்றும் தாடி வைத்த ஆண்களை மிகவும் பிடிக்கும். ஆனால் சிலருக்கு மீசை மற்றும் தாடியானது சரியான வளர்ச்சியை பெறாமல் இருக்கும். எனவே அத்தகைய பிரச்சனையில் இருக்கும் ஆண்கள், மீசை மற்றும் தாடியை நன்கு வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.                                             உடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே, மீசை மற்றும் தாடியின் வளர்ச்சி இருக்கும். எனவே உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருக்கும் உணவுகளான பீன்ஸ், முட்டை, பால், மீன் போன்றவற்றை எடுத்துக்கொள்ளவும். இதில் உள்ள மற்ற சத்துக்கள் முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும்.                              மீசை மற்றும் தாடி சீக்கிரம் வளர வேண்டுமெனில், அடிக்கடி ஷேவிங் செய்ய வேண்டும். இதனால் வளர்ச்சியானது அதிகரிக்கும்.                                மீசை மற்றும் தாடி சீக்கிரம் அடர்த்தியாக வளர்வதற்கு சிறந்த வழி விளக்கெண்ணெய் வைத்து மசாஜ் செய்வது தான். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்கள் வலு பெற்று முடி நன்கு வளர்ச்சி பெறும்.                                       டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண் ஹார்மோன். இவை தான் ஆண்களின் முடி வளர்ச்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த ஹார்மோன் ஆண்களின் உடலில் குறைவாக இருந்தால், முடி வளர்ச்சியானது குறைவாக இருக்கும். எனவே டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் ஜிங்க் அதிகம் உள்ள உணவுகளான முட்டை, மீன், கடல் சிப்பிகள், வேர்க்கடலை, எள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதன் மூலம், மீசை மற்றும் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.                                    உடலில் வறட்சி இருந்தாலோ அல்லது டாக்ஸின்கள் இருந்தாலோ, அவை முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை மயிர்கால்களுக்கு கிடைக்கப் பெறாமல், தடுக்கும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியமானதாகும்.                தூங்கும் போது தான் உடலில் உள்ள அனைத்து பாகங்களில் உள்ள பழுதுகளும் சரியாகும். எனவே மீசை நன்கு வளர்ச்சியடைவதற்கு, நல்ல தூக்கத்தை மேற்கொள்ளலாம்.                                   ரோஸ்மேரி ஆயிலுடன், ஆப்பிள் சீடர் வினிகர், ஜிஜோபா ஆயில் மற்றும் கற்றாழை ஜெல் போன்றவற்றை கலந்து, தாடி மற்றும் மீசை வளரும் இடத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து ஊற வைத்து வந்தால், மீசை நன்கு வளரும்.
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Page Links