பாலக் பக்கோடா!
தேவையான பொருட்கள்:
•பாலக்கீரை - 1 கட்டு
•முளை கட்டிய கறுப்பு
•கொண்டைக் கடலை - 1கப்
•அரிசி மாவு - 50 கிராம்
•இஞ்சி- சிறு துண்டு
•பச்சைமிளகாய் - 2
•சின்ன வெங்காயம் - 50 கிராம்
•மல்லித்தழை - சிறிதளவு
• உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
முளை கட்டிய கொண்டைக்
கடலையுடன், இஞ்சி, உப்பு சேர்த்து, கொரகொரப்பாக அரைக்கவும். கீரையைக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அரைத்த கொண்டைக் கடலை கலவையுடன், பச்சைமிளகாய், வெங்காயம், நறுக்கிய கீரை, மல்லித்தழை, அரிசிமாவு சேர்த்து நன்கு பிசையவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானவுடன், பிசைந்த மாவு கலவையில், சிறிது சிறிதாக கிள்ளி எடுத்து, எண்ணெயில் பொரிக்கவும்; பொன்னிறமானதும் எடுக்கவும்.
மொறுமொறுப்பான நொறுக்குத் தீனி தயார். சாப்பிட சுவையாக இருக்கும்.
👇👇👇👇👇👇👇
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக