Our website provides health tips, general knowledge, education, science, cooking tips, history etc. Our website was created for people.

திங்கள், 12 ஏப்ரல், 2021

இட்லி,தோசைக்கு கருவேப்பிலை பொடி!

          கருவேப்பிலை பொடி!




தேவையான பொருட்கள்


*கருவேப்பிலை- 100 கிராம்

 *வெள்ளை உளுந்து- 100 கிராம் 

*சமையல் எண்ணெய்- 50 மி.லி.,

*காய்ந்த மிளகாய்- 7 

*பெருங்காயத்தூள்- சிறிதளவு 

*உப்பு- தேவையான அளவு


செய்முறை: 

          காம்பு நீக்கிய கருவேப்பிலையை, நன்கு கழுவி, வெயிலில் உலர்த்தவும், வெள்ளை உளுந்து, மிளகாய் வற்றல் ஆகியவற்றை எண்ணெயில் நன்கு வறுக்கவும்.     

          இவற்றுடன், உலர்த்திய கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தூளாக அரைக்கவும், மணமும் சுவையும் நிறைந்த கருவேப்பிலை இட்லி பொடி தயார். 

          இந்த பொடியில், நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, இட்லி, தோசையைத் தொட்டு சாப்பிடலாம், மிகவும் சுவையாக இருக்கும். சிறுவர்,சிறுமியர் விரும்புவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Page Links