தேவையான பொருட்கள்:
*கோதுமை மாவு - 150 கிராம்
*சோள மாவு - 50 கிராம்
*பீட்ரூட் துருவல் - 1 கப்
*மஞ்சள், மிளகாய், சீரகத் துாள், உப்பு, எண்ணெய், தண்ணீர் -தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில், எண்ணெய் காய்ந்ததும், துருவிய பீட்ரூட்டை போட்டு வதக்கவும்.நன்கு வதங்கியதும், இறக்கி ஆற விடவும்.
அதனுடன், கோதுமை மாவு, சோள மாவு, மஞ்சள் துாள், மிளகாய் துாள், சீரகத் துாள், தேவையான உப்பு சேர்த்து, நன்கு கலக்கவும். இந்த கலவையில்,தேவையான தண்ணீர், ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு நன்றாக பிசையவும்.
அரை மணி நேரத்துக்குப்பின், இந்த
மாவு கலவையை, சப்பாத்தி போலாக்கி,இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
இப்படி சுட்ட சப்பாத்தியை, ரோலாக உருட்டவும். சுவையான, பீட்ரூட் சப்பாத்தி ரோல் தயார். வெங்காய ராய்த்தாவுடன் பரிமாறலாம். சத்துக்கள்
நிறைந்தது ; சிறுவர்,சிறுமியர் விரும்பி உண்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக