Our website provides health tips, general knowledge, education, science, cooking tips, history etc. Our website was created for people.

செவ்வாய், 20 அக்டோபர், 2020

NMMS Exam question paper, NMMS exam detail.

 

           NMMS தேர்வு 

 எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 12 ஆயிரம் உதவித்தொகை!

       அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் 1000 வீதம், நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது.

           மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த உதவித்தொகை திட்டம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல், செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள, திறன்வாய்ந்த மாணவர்கள் எட்டாம் வகுப்பிற்குப் பிறகு பணப் பிரச்சனையால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக இந்த உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேருக்கு இந்த உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த உதவித்தொகை பிரித்து தரப்படும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 6 ஆயிரம் மாணவர்கள் முதல் 7000 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை பெறும் வாய்ப்பு உள்ளது.

    இந்த உதவித்தொகையைப் பெற விரும்பும் மாணவர்கள், அரசுப் பள்ளியில் படிப்பவர்களாக இருக்க வேண்டும். இதற்கென அரசால் நடத்தப்படும் தகுதித்திறன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.     

         தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு என். எம். எம். எஸ் (National Means Cum Merit Scholarship)தேர்வு அனைத்து வட்டார அளவில் நடைபெறவுள்ளது.

       அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் நடப்புக் கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

           இந்த தேர்தலில்  இரண்டு பிரிவாக கேட்கப்படும். ஒன்று MAT, இன்னொன்ரு SAT என்று இரண்டு பிரிவுகள் உள்ளது. MATல் உங்களுடைய மனத்திறன் சம்பந்தமான கேள்விகள் கேட்கப்படும். SATல் 6ம் வகுப்பு 1,2,3 Term, 7ம் 1,2,3 Term, 8ம் வகுப்பு 1,2,Term ஆகிய புத்தகத்திலிருந்து கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடத்தில் இருந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் கேள்விகள் கேட்கப்படும். தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். SATல் 90 கேள்விகள் MATல் 90 கேள்விகள் என்று 180 கேட்கப்படும். தேர்வு மூன்றரை மணி நேரம் நடைபெறும். முதல் ஒன்றரை மணி நேரம் MATம் அடுத்த அரை மணி நேரம் இடைவேலையும் அடுத்த ஒன்றரை மணி நேரம் SATம் நடைபெறும். MAT மற்றும் SATக்கான வினாத்தாளை கீழே கொடுத்துள்ளேன்.


MAT question paper- Click here 

SAT question paper- click here 

            இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்து எனக்கு நீங்கள் நன்றி சொல்ல நினைத்தால் கீழே உள்ள subscribe buttonஐ   

Click செய்யவும். எனக்கு நன்றி தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Page Links