தேவை:பிரெட்-4, பால் பவுடர்- ஒன்றரை டீஸ்பூன், பால்- அரை கப், எண்ணெய்- தேவையான அளவு,
சர்க்கரை பாகுக்கு: சர்க்கரை அரை கப், தண்ணீர்- அரை கப், ரோஸ் எஸன்ஸ்- அரை டீஸ்பூன்.
செய்முறை: பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு, பின்னர் பாலில் ஊறவைத்து பிழிந்து கொள்ளவும். பின்னர், கையால் அழுத்தி பிசையவும் அல்லது மிக்ஸியில் அடிக்கவும். பால் பவுடர் சேர்த்து மாவாக பிசைந்து கொள்ளவும்.
பிறகு, சர்க்கரைப் பாகு செய்ய வேண்டும். சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கரைய வைத்து, நன்கு கொதிக்கவிட வேண்டும். பிசுபிசு பதம் வந்த பிறகு இறக்கி, அதில் ரோஸ் எஸன்ஸ் சேர்த்தால், சர்க்கரைப் பாகு தயார்!
இப்போது வாணலியில் எண்ணெயை காயவைத்து, மாவை சின்னச்சின்னதாக உருட்டி மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து, சர்க்கரைப் பாகில் போடவும்.2 மணி நேரம் ஊறிய பிறகு பரிமாறவும்.
கடையில் விலை அதிகமான மிக்ஸ் வாங்கி செய்தால் ருசி எப்படி இருக்குமோ... அதே போல இருக்கும் இந்த ஜாமூனின் ருசி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக