இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவராக இருந்த சாணக்கியரின் அறிவுரைகள் அந்த காலம் முதல் இக்காலம் வரை பொருந்தக்கூடியதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது.
ஒழுக்கமான வாழக்கைக்கும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் நாம் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் என்னென்னெ என்று சாணக்கியர் கூறியுள்ளார். சிலசமயங்களில் எந்த தவறும் செய்யாத போது கூட நீங்கள் சில பழிகளுக்குஆளாக நேரிடும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
1. மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்வது
ஒரு ஆணின் வாழ்க்கையில் சரிபாதி பெண்தான். மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்வது என்பது எப்போதும் ஆண்களுக்கு வேதனை தரும் ஒன்றுதான் விவாகரத்து, மனைவியின் இறப்பு என பிரிவு எந்த வடிவில் இருந்தாலும் ஆண்களை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கும்.மனைவி பிரியும்போது ஆண்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள்.
2. கல்வி
ஒரு மனிதன் நிறைவான அழகுடனும், பெருமை வாய்ந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவர்களுக்கு கல்வி இல்லையெனில் அவர்கள் இறந்த மலராகவே கருதப்படுவார்கள்.அதனால் எந்த உபயோகமும் இல்லை.
3. போரில் பாதுகாக்கபடும் எதிரி
போரில் எதிரியை ஒருவன் காப்பற்றினால் அது அவனது வாழ்கையையே சிதைத்துவிடும். இதன் மற்றொரு அர்த்தம் தவறான ஒருவரின் புறத்தில் நீங்கள் இருந்தால் நீங்கள் வாழ்க்கைமுழுவதும் வருத்தப்படுவீர்கள் என்பதாகும்.
4. தவறான மன்னனுக்கு சேவை
சாணக்கியரின் கருத்துப்படி தவறான ஒரு மன்னனுக்கு சேவை செய்தால் நீங்கள் வாழ்க்கைக்கு துரோகம் செய்கிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு அர்த்தம் நீங்கள் எப்பொழுதும் வாழ்க்கையில் நேர்மையான மக்களின் பக்கத்தில் இருக்க வேண்டும் ஒருபோதும் மோசமான நபர்களின் பக்கத்தில்இருக்கக்கூடாது.
5. ஏழ்மை
சாணக்கியரின் கருத்துப்படி ஒருவர் ஏழ்மையில் இருந்தால் அவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதனை ஒருபோதும் நடக்க அனுமதிக்காதீர்கள்.பணத்தை எப்படி சேமிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும், உங்களின் பழக்கத்தால் ஏழ்மை உங்களை நெருங்க அனுமதிக்காதீர்கள்.
6. தவறான நிர்வாகம்
நீங்கள் ஆற்றலும், அதிகாரமும் உள்ளவராக இருந்தால் தவறான நிர்வாகம் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்களுக்காக வேலை செய்பவர்கள் இருந்தால் அவர்கள் புத்திசாலிகளாகவும், அவர்களின் வேலையை என்னவென்பதை உணர்வபவர்களாகவும் இருக்க வேண்டும். இல்லையெனில் எவ்வளவுபெரிய சாம்ராஜ்யமாக இருந்தாலும் சரிந்து விடும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சாணக்கியர் கூறும் வேறு சில அறிவுரைகள் என்னவென்று பார்க்கலாம்.
7. மகளின் திருமணம்
உங்கள் மகளை
எப்போதும் நல்ல குடும்பத்தில் மணம் முடித்து கொடுங்கள்,உங்களின் மகனுக்கு எப்போதும் எதிரிகளை சமாளிக்க கற்றுக்கொடுங்கள், உங்களின் நண்பர்களை எப்போதும் தர்மத்தின் பாதையில் நிற்க அறிவுறுத்துங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக