என் பையன் நல்லா படிக்கிறான். ஆனால் பரீட்சையில் மறந்துபோய், எழுதாமப்போய், மார்க் குறைஞ்சிடுது என்று முக்கால்வாசிப் பெற்றோர்கள் புலம்புவது இயல்பு. குழந்தைகளுக்கு உணர்ச்சிப்பூர்வமாக கற்றுத் தரும்போது, குறிப்பாக ராகத்துடன் ஒன்றைச் சொல்லித் தரும்போது, அது பசு மரத்தாணிபோல் பதிந்து அவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
கற்றலுக்குப் புலன்கள்தான் வாயிலாக அமைக்கின்றன. மூளை முழுவதும் நரம்பு செல்களும், துணைச் செல்களும் உள்ளன. ஒவ்வொரு நரம்பிழையின் நுனியிலும் நரம்பு மொட்டுகள் உள்ளன. அவற்றில் நரம்பு கடத்திகள் எனப்படும் வேதிப் பொருள்கள் அதிக அளவு இருக்கும். இதன்மூலம், ஒவ்வொரு நியூரான்களும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு இயங்குகின்றன.இவற்றில் ஏதேனும் தடங்கல் ஏற்படும் போது கற்றல் தடைபடுகிறது. மூளையில் பதிய வேண்டிய செய்திகள் தடைபடுகின்றன. மேலும் ஏற்கெனவே பதிந்தவையும் இழக்க நேரிடுகிறது.
நினைவாற்றலை அதிகரிக்க குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய பயிற்சிகள்:
1. தொடர்புபடுத்துதல்:
கற்றுக்கொண்ட புதிய செய்தியைப் பழைய செய்தியுடன் தொடர்புபடுத்திக்கொள்ளுதல்.இவை நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
2. வெட்டுதல்:
தொடர்ச்சியான, நீளமான செய்திகளைச் சிறுசிறு வார்த்தைகளாக உடைத்து நினைவில் கொள்ளுதல்.
3. இணைப்பு முறை:
நான்கு சொற்களை நினைவில் கொள்ள, அச்சொற்களை ஏதாவது ஒரு செயலுடன் இணைத்துப் பயன்படுத்துதல்.
4. இடங்களோடு ஒப்பிடுதல்:
பொருள் அல்லது கருத்துகளை நினைவில் கொள்ள, அவற்றைச் சில இடங்களோடு இணைத்து வைத்துக் கொண்டால், நினைவில் நிறுத்துவது எளிதாக இருக்கும்.
5. ஒரே ஓசையுடைய சொற்கள்:
ஒரு சொல்லைக் கற்கும்போது அதே ஒலியுடன் இருக்கும் பிற சொற்களோடு இணைத்து கற்பது.
6. ஒத்திகைப் பயிற்சி:
ஒன்றை வெளிப்படுத்துவதற்கு முன் பலமுறை ஒத்திகை பார்த்துக் கொள்ளுதல், நினைவை மேம்படுத்தும்.
7. பாடல் முறை:
கற்றுக்கொள்ள வேண்டியவற்றைப் பாடலின் வரிகளாக அமைத்துப் பாடல் மூலம் நினைவில் கொள்வது.
8. தாளம் முறை:
செய்திகளைத் தாளத்தோடு இணைத்துக் கற்கும் முறை.இவை நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
9. காட்சிப்படுத்துதல்:
கற்றுக்கொண்ட செய்திகளைக் காட்சிப்படுத்திக் கொண்டால் நினைவில் கொள்ள எளிதாக இருக்கும்.
10. விளையாட்டு முறை:
கற்றுக்கொடுக்க வேண்டிய செய்திகளை, சிறுசிறு விளையாட்டுகள் மூலம் கற்றுக் கொடுத்தால் அவை எளிதாக நினைவில் பதியும்.இவை நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக