ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஒருமித்த
எண்ணம் ராமு - சோமு இருவரிடையே இருந்தது.
இருவரும் எட்டாம் வகுப்பு படித்து வந்தனர்.உலக விஷயங்கள் அறிந்து கொள்வதில் ஆர்வம்
கொண்டிருந்தனர்.
தினமும் செய்தித்தாளில் ஏதாவது ஒரு சாதனை
யாளரைப்பற்றி வந்து கொண்டிருந்தது.ராமுவின் தந்தை சிறந்த நீச்சல் பயிற்சி வீரர்.அவரிடம் இருவரும் நீச்சல் கற்றுக் கொண்டு
'சாதனை' புரிய வேண்டும் என்று எண்ணினர்.
அவ்வெண்ணத்தினை ராமுவின் தந்தையிடம்
தெரிவித்தனர்.ராமுவின் தந்தையும் சம்மதித்தார்.
ராமு - சோமு இருவரும் ஆறுமாதம் வரை கடுமையான நீச்சல் பயிற்சி பெற்றனர்.குளம் - குட்டை - ஏரிகளில் நீந்தி வந்தவர்கள் கடலில் நீந்தி சாதனை புரிய தங்களது விருப்பத்தினை தெரிவித்தனர். ராமுவின் தந்தை இருவரது சாதனை விபரம் குறித்து கவர்னர் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து இலாகாவினருக்கும் தெரியப்படுத்தினார்.
அதற்கான அனுமதியும் - பாதுகாப்பு ஏற்பாடுகளும் போலீஸ் கமிசனர் ராதாகிருஷ்ணன்
அவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றது. சாதனை செய்யும் நாள் வந்தது.பாதுகாவலர்கள் இரு மோட்டார் படகுகளில்
முன்னும் பின்னும் செல்ல தயாரானார்கள்.ராமு - சோமு இருவரும் தங்களது உடலில்
ஒருவித திரவத்தைப்பூசினர். அதற்கான உடைதனையும் - கண்ணாடியையும் அணிந்து
கொண்டு நீந்தத் தொடங்கினர்.
சாதனை வீரர்களுக்குத் துணையாக உற்சாகம்
அளிக்கும் வகையில் நீச்சல் பயிற்சியாளரும் அவர்களுடன் நீந்திச் சென்றார்.சிறிதும் அச்சமின்றி - துணிச்சலாக தங்கள் லட்சியத்தை மனதில் எண்ணிக் கொண்டு சிறிதும்
சோர்வின்றி நீந்தினர். நான்கு நாட்கள் வரை நீந்தி...
விடாமுயற்சியினால் குறிப்பிட்ட எல்லையையும்
தொட்டனர்.
ஒற்றுமையும் - உறுதியும் - தீவிர முயற்சியும் -
தன்னம்பிக்கையும் - ஊக்குவிப்பும் அவர்களை
வெற்றி பெறச் செய்தது.
அவர்களது சாதனையை பாராட்டி அரசு - பாராட்டும் பரிசுகளும் அளித்து உற்சாகமும் ஊக்கமும் அளித்தது. சின்னஞ்சிறு வயதிலேயே சாதனை படைத்த ராமு - சோமு இருவரையும் நாடே புகழ்ந்தது. அந்த பெருமையின் சின்னமாக 'கின்னஸ் ரெக்கார்டிலும்' இடம் பெற்றனர்.இருவரும் சாதனையின் புகழைக் கண்டு
அகம்பாவமோ - ஆணவமோ கொள்ளவில்லை.அதையே அவர்களது' சாதனையின் இலக்காக நிறுத்திக் கொள்ளவுமில்லை. மேலும், மேலும் அவர்களது சாதனையின் எல்லை பரந்து கொண்டே சென்றது. என்னால் தான் நீ உயர்ந்தாய் என்ற பேத உணர்வு அவர்களுக்குள் எப்போதும் எழுந்ததுமில்லை.
ஒற்றுமையும் - பணிவுமே அவர்களை மேலும் பல சாதனைகளைப் புரியச் செய்தது.
ராமு - சோமு சென்ற இடங்களிலெல்லாம் மலர்
மாலைகளும் - புகழ் மாலைகளும் வந்து குவிந்தன. ஒன்றுபட்ட உணர்வும் - ஒற்றுமையுணர்வும்
உயர்வடையச் செய்தது.
‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு' என்ற பொன் மொழியை உணர்த்துவதாக ராமு - சோமுவின் ஒற்றுமை ஓங்கியிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக