மருந்துவ குணம் நிறைந்த மாமரம்
வாழையைப் போலவே மாமரமும் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.'மாம்பழம் சாப்பிட்டால் சூடு' என்று பலரும் அப்பழத்தை தவிர்க்கிறார்கள். அளவாக உண்டால் எந்தப் பழமுமே மனித உடலுக்கு கெடுதலைத் தராது.
மாஇலை, மரப்பட்டை, வேர், என்று சகலமும் மருத்துவக் காரணங்களுக்கு பயன்படுத்தப் படுகிறது. மாங்காயை வேகவைத்து மசித்து உண்டால் களைப்பு போன இடம் தெரியாது. குறிப்பாக கோடைக் காலங்களில் கடும் வெயிலால் ஏற்படும் சோர்வுக்கு இது மாமருந்து.
நீரிழிவுப் பிரச்சினை இருப்பவர்கள் மாவிலைக் கொழுந்தை அப்படியே வாயில் போட்டு மெல்லுவது நல்லது. மாங்கொட்டையைப் பொடி செய்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப் போக்கு நிற்கும்.மருந்துவ குணம் நிறைந்த மாமரம் பற்றி தெரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.மிக்க மகிழ்ச்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக