தீபாவளி பற்றிய சுவையான தகவல்கள்!
சோழர்களின் ஆட்சிக் காலம் வரை தமிழகத்தில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டதில்லை.
நரகாசுரனை வதம் செய்த நாளைத்தான் நாம் தீபாவளியாக கொண்டாடுகிறோம்.அந்த நரகாசுரன் ஆட்சி செய்ததாக சொல்லப்படும் பிராக்ஜோதி ஷபுரம் இன்றைய அசாம் மாநிலத்தில் இருக்கிறது.
பூமியின் குழந்தை என்ற பொருள் படுகிற 'பவுமன்' என்பது தான் நரகாசுரனின் நிஜப் பெயர்.
இலங்கையில் தீபாவளியை ராமர் வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பிய நாளாக கொண்டாடுகிறார்கள்.
சிவகாசியில் 1923-ம் ஆண்டு பட்டாசு தயாரிக்கும் தொழில் தொடங்கியது.
'டபாஸ்' என்கிற சமஸ்கிருத சொல்தான் மருவி 'பட்டாசு' என்று ஆனது.
கலர், கலராய் மத்தாப்புகள் எரிகிறதே! எப்படி தெரியுமா? மத்தாப்புக்களில் சோடியம் உப்பு கலக்கப்பட்டிருந்தால் அது மஞ்சள் நிறமாகவும், ஸ்ட்ரான்ஷியம் உப்புகள் கலக்கப்பட்டிருந்தால் அது சிவப்பு நிறமாகவும், பேரியம் உப்புகள் கலக்கப்பட்டிருந்தால் அது பச்சை நிறமாகவும் தெரியும்.
ஒடிசாவில் தீபாவளிக்கு மறுநாள் எம தீபாவளி என்று கொண்டாடுகிறார்கள்.
பீகாரில் தீபாவளியன்று வீட்டுக்கு வீடு துடைப்பத்தை தீ வைத்து கொளுத்தி வீசி எறிகிறார்கள். இப்படிச் செய்தால் மூதேவி ஓடிவிடுமாம்.
குஜராத் மக்கள் தீபாவளியன்று புது கணக்கு தொடங்குவார்கள்.
மராட்டிய மாநிலத்தில் தீபாவளி பண்டிகை 6 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
நேபாளத்தில் தீபாவளி 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
ஆசிய நாடுகளில் பெரும்பாலானவர்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர்
தீபாவளிக்கு சிங்கப்பூரில் தேசிய விடுமுறை விடப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் தீபாவளி பண்டிகைக்கு தேசிய பண்டிகை என்ற அந்தஸ்தை கொடுத்துள்ளனர்.
ஜப்பானியர்கள் தீபாவளியை 3 நாட்கள் கொண்டாடுகிறார்கள். நாளிதழ்களில் முதன்முதலாக தீபாவளி மலர் வெளியிட்ட பெருமை பழம்பெரும் பத்திரிக்கையான சுதேசி மித்ரனுக்குத்தான்.
அமெரிக்கா-ஹாலந்து- நியூசிலாந்து-கனடா- மொரிசீயஸ், பிஜி, ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், நேபாளம், சிங்கப்பூர், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, அரேபியா, ஆஸ்திரேலியா... நாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக