எரிமலை வெடிக்கும்போது, பல டன் எடை கொண்ட கற்கள் பல மைல் தூரத்திற்கு தூக்கி எறியப்படுவதை கண்டிருக்கிறார்கள். தூங்கிக்கொண்டிருக்கும் சில எரிமலைகள் எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென்று வெடித்து, தப்பிக்க சந்தர்ப்பம் தராமல் நிறைய மக்களை அழித்திருக்கின்றன.
எரிமலை வெடிக்கும்போது டன் கணக்கான எடையுள்ள,
எரிகற்கள் ஆகாயத்தை நோக்கி வீசப்படுகின்றன. சில எரிமலைகள் பல டன் எடையுள்ள விஷ வாயுக்களை கொண்ட மேகமூட்டத்தை உருவாக்கி, மனிதர்கள், விலங்குகள், செடி கொடிகள் போன்ற அனைத்து உயிரினங்களையும் அழித்து விடுகின்றன. பல எரிமலைகள் ரத்தச் சிவப்பாக காட்சி தரும் எரிமலைக் குழம்பை வெளியேற்றுகிறது. அதிக வெப்பத்தால்
கொதித்து கொண்டிருக்கும் இந்த தீக்குழம்பு நிறைய இடத்துக்கு பரவி அனைத்தையும் எரித்து விடுகிறது.
இது ஒருபக்கம் இருந்தாலும், எரிமலைகளும் மனிதனுக்கு சில நன்மைகளை செய்கிறது. பூமிக்கு வெகு ஆழத்தில்
இருக்கும் வளமான கனிம சத்துக்கள் நிறைந்த மண்ணையும் கற்களையும் மலைகள் மீதும் சமவெளிகள் மீதும் மிகப் பெரிய அளவில் வீசுகிறது. இது விவசாயத்தை பெருக்க உதவுகிறது.
உலகின் பல இடங்களில் எரிமலை வெளிப்படுத்தும் குழம்பை பயன்படுத்தி நீரை அதிக அழுத்தம் கொண்ட நீராவியாக மாற்றி அந்த நீராவியை கொண்டு விசையாழிகளை சூழ
வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
பூமிக்கு வெகு ஆழத்தில் இருக்கும் பல தாதுப்பொருட்கள்
வெளியே தூக்கி எறியப்படுகின்றன. பல தொழிலகங்களின் உற்பத்திக்கு இவை மூலப்பொருட்களாக பயன்படுகிறது. எரிமலையின் உதவி இல்லாமல், வெகு ஆழத்தில் இருக்கும் இந்த தாது பொருட்களை வெளியே எடுத்து வரவே முடியாது. இவையெல்லாம் எரிமலையால் ஏற்படும் நன்மைகள்.
இது போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள subscribe buttonஐ கிளிக் செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக