Our website provides health tips, general knowledge, education, science, cooking tips, history etc. Our website was created for people.

வியாழன், 30 ஜூலை, 2020

கரண்டிகளின் பிறப்பு

    
          இன்றைய நவநாகரிக உலகத்தில், அழகிய கரண்டிகள், முள்கரண்டிகள் மூலம் உணவுகளை எடுத்து சாப்பிடுவது என்பது பெரும்பாலானவர்களிடம் தினசரி வழக்கமாக மாறிவிட்டது. இந்த கரண்டிகள் பிறந்த கதையை நீங்கள் அறிவீர்களா?
            பண்டைய மனிதன் பயன்படுத்திய கரண்டி, கிளிஞ்சல்கள் மூலம் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு கிரேக்கர்களும், ரோமானியர்களும் மரத்தினால் செய்யப்பட்ட கரண்டிகளைப் பயன்படுத்தினார்கள்.
            உணவுப் பண்டங்களை பக்குவம் செய்யும்போது அதைக் கிளறவும், கலக்கவும் பெரிய கரண்டிகளை பயன்படுத்தினார்கள். இந்தியா உள்ளிட்ட ஆசிய பகுதிகளில் மரக்குச்சியினால் ஆன கைப்பிடியும், 'சிரட்டை' எனப்படும் தேங்காய் மூடியும் கொண்டு தயாரிக்கப்பட்ட அகப்பைகள் பிரபலமாக விளங்கின.
            17-ம் நூற்றாண்டின் மத்தியில்தான் சாப்பாட்டு மேஜையில் உணவு உண்ணும் கரண்டிகள் சகஜமாக பழக்கத்திற்கு வந்தன. அப்போதுதான் கத்திகளும், முள்கரண்டிகளும் கூட உணவுப் பழக்கத்துடன் தொடர்பு கொண்டதாக பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது.
             சமீப காலங்களில்தான் உலோக கரண்டிகள் எங்கும் ஆக்கிரமித்துவிட்டன. தற்போது அழகிய வண்ணங்களில் பிளாஸ்டிக் கரண்டிகளும் கிடைக்கின்றன.
              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Page Links